எங்களைப் பற்றி

மாநாடு, பேரவை, ஏற்பாட்டாளர்கள்

WTTC 2026

மாநாட்டைப் பற்றி

உலகத் தமிழாசிரியர் மாநாடு, தமிழ்மொழிக் கல்வியாளர்களின் அனைத்துலக ஒன்றுகூடல் ஆகும். 1992 முதல் தொடர்ந்து நடைபெற்றுவரும் இம்மாநாடு சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், இந்தியா, தென்னாப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளது.

16-வது மாநாடு 2026 டிசம்பர் 4 முதல் 6 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் “செயற்கை நுண்ணறிவும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலும்” என்னும் கருப்பொருளில் நடைபெறுகிறது.

Bharatanatyam
Thiruvalluvar
Thanjavur
உலகத் தமிழாசிரியர் பேரவை

World Tamil Teachers' Organisation

உலகத் தமிழாசிரியர் பேரவை

உலகத் தமிழாசிரியர் பேரவை உலகெங்கிலுமுள்ள தமிழாசிரியர்களை ஒன்றிணைக்கும் அமைப்பாகவும், உலகத் தமிழாசிரியர் மாநாட்டுத் தொடரின் பொறுப்பாளராகவும் விளங்குகிறது.

உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் நோக்கங்கள்

தமிழ்மொழி கற்பித்தலுக்கான புத்தாக்கமிக்க அணுகுமுறைகளை ஆராய்வதன் மூலம் மேம்பாட்டுக்கு வழிகோலுதல்.

தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வுகளைப் பகிர்தல்.

உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றமும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் தொடர்ந்து நிகழ வழிவகுத்தல்.

ஏற்பாட்டாளர்கள்

மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம்

ஏற்பாட்டாளர்

மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்கம்

National Union of Tamil School Teachers of Malaya (NUTT)

உலகத் தமிழாசிரியர் பேரவை

இணை ஏற்பாட்டாளர்

உலகத் தமிழாசிரியர் பேரவை

World Tamil Teachers' Organisation (WTTO)

இணைந்து செயல்படுவோர்

“ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு” · Bersatu Berpadu