
மாநாடு
கருப்பொருள், நோக்கங்கள், கட்டுரைத் தலைப்புகள், நிகழ்ச்சி நிரல்
மாநாட்டுக் கருப்பொருள்
செயற்கை நுண்ணறிவும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலும்
Artificial Intelligence and Teaching & Learning Tamil Language
4, 5 & 6 டிசம்பர் 2026 · கோலாலம்பூர், மலேசியா
மாநாட்டு நோக்கங்கள்
- 01
உலகத் தமிழாசிரியர்களிடையே தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துதல்.
- 02
கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு அணுகுமுறைகளைக் கண்டறிதல்.
- 03
தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல் சிந்தனைகளை விரிவடையச் செய்தல்.
- 04
தற்காலச் சூழலில் தமிழ்மொழி பயிற்றியல் அணுகுமுறைகளை விளக்குதல்.
கட்டுரைச் சமர்ப்பிப்பு நிறைவு
WTTC 2026
கட்டுரைத் தலைப்புகள்
பின்வரும் பன்னிரண்டு தலைப்புகளில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டனர். ஏற்றுக்கொள்ளப்படும் கட்டுரைகள் மாநாட்டு ஆய்வடங்கலில் வெளியிடப்படும்.
- 1
தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு
- 2
தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் சவால்களும் வாய்ப்புகளும்
- 3
தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல்
- 4
பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் உத்திமுறைகள்
- 5
தமிழ்மொழியைப் பிறமொழியாகக் கற்பிக்கும் உத்திமுறைகள்
- 6
தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் சவால்களும் வாய்ப்புகளும்
- 7
தற்கால சூழலில் தமிழ்மொழி பயிற்றியல் அணுகுமுறை
- 8
தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் மதிப்பீடு
- 9
தமிழ்மொழி கலைத்திட்டம்
- 10
தமிழ்மொழி பாடநூல்
- 11
தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல்
- 12
தமிழ்மொழி இலக்கியம் கற்றல் கற்பித்தல்
கட்டுரைச் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது — கட்டுரைகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பில் படிக்கவும் பதிவிறக்கவும் இயலும். மாநாட்டுக் கட்டுரைகளைக் காண்க
கட்டுரையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்
கட்டுரை எழுதுதலும் படைத்தலும்
கட்டுரைகள்
- மாநாட்டுக் கருப்பொருளையொட்டியே கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். அவை மாநாட்டு நோக்கங்களுக்கு வழிகாட்டி நின்றால் நன்று.
- ஆய்வுக்கட்டுரைகள், தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆய்வுகளாகவோ, வகுப்பறை ஆய்வுகளாகவோ அமைதல் நன்று.
- ஆய்வுகளின் முடிவில் கற்றல் கற்பித்தலுக்குத் துணைபுரியும் பரிந்துரைகள் கூறப்படல் வேண்டும்.
- பணிபுரியும் பள்ளியில் மாணவர்களிடையே ஆய்வு அல்லது பயிற்சி மேற்கொண்டு, அதைக் காணொளியாகக் கட்டுரையை முன்வைக்கும்போது பயன்படுத்தலாம்.
- கட்டுரைகள், கற்பித்தலின்போது எதிர்நோக்கும் சவால்களையும் சிக்கல்களையும் களைய வழிகாட்ட வேண்டும்.
- கட்டுரைகள் செய்முறையை அடிப்படையாகக் கொண்டும் அமையலாம்.
ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம்
- 100 – 150 சொற்களுக்குள், ஒருங்குறி எழுத்துருவில் (Unicode) அமைதல் வேண்டும்.
- உங்கள் முழுப்பெயர், மின்னஞ்சல், தொடர்பு எண் ஆகிய முக்கிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
கட்டுரைக்குரிய காலவளவு · 20 நிமிடம்
- கட்டுரையாளர் அறிமுகம்
- 5 நிமிடம்
- கட்டுரையை முன்வைத்தல்
- 10 நிமிடம்
- ஆய்வினை விளக்குவதற்கு
- 5 நிமிடம்
தற்காலிக நிகழ்ச்சி நிரல்
கோலாலம்பூரில் மூன்று நாள்கள்
நேரங்கள் தற்காலிகமானவை; மாற்றத்துக்கு உட்பட்டவை.
3
மாநாட்டு நாள்கள்
6
பொது அமர்வுகள்
70
கட்டுரைகள்
3
இணை அரங்குகள்
வெள்ளி, 4 டிசம்பர் 2026
வருகையும் சிறப்புரைகளும்
நண்பகல் 12.00 – 3.00
வருகைபதிவும் விடுதியில் தங்குதலும்
பிற்பகல் 3.00 – 4.00
தேநீர்
மாலை 4.00 – 6.00
சிறப்புரைசிறப்புரை அமர்வு
மாலை 6.00 – 8.00
இரவு உணவு
இரவு 8.00 – 10.00
கட்டுரைகட்டுரைப் படைப்பு